Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எம்ஜிஆரின் தொடர்ச்சி நான் தான்: மதுரையில் கமல்ஹாசன் பிரச்சாரம்

எம்ஜிஆரின் தொடர்ச்சி நான் தான்: மதுரையில் கமல்ஹாசன் பிரச்சாரம்
, ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (19:14 IST)
எம்ஜிஆரின் தொடர்ச்சி நான் தான்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் இன்று முதல் மதுரையில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. இதற்காக இவர் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார்

 
மதுரை மேலமாசி வீதி உள்பட பல இடங்களில் அவர் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் அப்போது அவர் ’எம்ஜிஆரின் தொடர்ச்சி நான் தான் என்றும் எம்ஜிஆரின் கனவை நிறைவேற்றுவேன் என்றும் அவர் தெரிவித்தார் 
 
காந்தி மற்றும் பெரியோர் வாக்கு அரசியலில் ஈடுபடவில்லை என்றும் ஆனால் எம்ஜிஆர் போன்றோர் வாக்கு அரசியலில் ஈடுபட்டு மிகப்பெரிய வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்தார்கள் என்றும் அந்த எம்ஜிஆரின் தொடர்ச்சி நான் தான் என்றும் அவர் கூறியுள்ளார் கமல் ஹாஸன் பேச்சுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே எம்ஜிஆரின் ஆட்சியை நான் தருவேன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கழிவுநீர் கால்வாயில் கிடந்த செல்லாத 1000 ரூபாய் நோட்டுகள்: கடலூரில் பரபரப்பு