Publish Date: Wed, 16 Dec 2020 (12:38 IST)
Updated Date: Wed, 16 Dec 2020 (14:01 IST)
கமலிடம் ரஜினியுடன் கூட்டணி அமைத்தால் இருவரில் யார் முதல்வர் வேட்பாளர் என கேட்கப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் தற்போதே தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி விட்டிருக்கிறது. சீரமைப்போம் தமிழகத்தை என்ற முழக்கத்துடன் கமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நடிகர் ரஜினியும் ஜனவரி மாதம் கட்சியை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கூட்டணி அமைப்பார்களா என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் கமலிடம் ரஜினியுடன் கூட்டணி அமைத்தால் இருவரில் யார் முதல்வர் வேட்பாளர் என கேட்கப்பட்டது.
இதற்கு கமல் வரும் தேர்தலில் என் தலைமையில் 3வது அணி அமையும். ரஜினியோடு கூட்டணி அமையும் பட்சத்தில் இருவரில் யார் முதல்வர் வேட்பாளர் என்று பேசி முடிவெடுப்போம் என தெரிவித்துள்ளார்.