Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பஸ் கட்டண உயர்வு குறித்து 4 நாள் கழித்து கருத்து கூறிய கமல்

பஸ் கட்டண உயர்வு குறித்து 4 நாள் கழித்து கருத்து கூறிய கமல்
, செவ்வாய், 23 ஜனவரி 2018 (22:25 IST)
கடந்த 20ஆம் தேதி தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தியது. இந்த கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களது போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நான்கு நாட்கள் கழித்து திடீரென ஞானோதயம் பிறந்தது போல் நடிகர் கமல்ஹாசன் வழக்கம்போல் டுவிட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே! என்று கூறியுள்ளார்

மக்களின் பிரச்சனை ஒன்றுக்காக இவ்வளவு காலதாமதம் செய்து கமல் குரல் கொடுப்பதற்கு பதிலாக ரஜினி மாதிரி அமைதியாக இருந்திருக்கலாமே என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளில்லாத அமேசான் சூப்பர் மார்க்கெட்: ப்ளான் என்ன??