Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'முதல்வன்' பட பாணியில் அதிகாரியிடம் போனில் பேசிய கமல்

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (20:47 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த 'முதல்வன்' திரைப்படத்தில் ஒருநாள் முதல்வராகும் அர்ஜூன், மக்களிடம் குறை கேட்டு அதுகுறித்து போனில் அதிகாரியிடம் பேசுவார். சரியாக பதில் சொல்லாத அதிகாரிகளுக்கு சஸ்பெண்ட் ஆர்டரை பேக்ஸில் அனுப்புவார். இந்த காட்சி படத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதேபோன்று நடிகர் கமல்ஹாசன் இன்று கொடைக்கானலில் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, மக்கள் கூறிய ஒரு புகாரை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் உடனே போன் செய்து கமல்ஹாசன் கேட்டார்.

கொடைக்கானலில் உள்ள ஒரு பகுதியில் அரசு பொதுமக்களுக்கு வீடு கட்டி தரும் திட்டம் ஒன்றில் ஊராட்சி அதிகாரி ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கமல்ஹாசனிடம் மக்கள் புகார் கூறினர். உடனே தனது செல்போனில் ஊராட்சி அதிகாரியை தொடர்பு கொண்டு பேசி வீடுகட்ட அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், அவ்வாறு கேட்காமல் இருக்கும்படி பார்த்து கொள்வதாகவும் கூறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார்.. 5 பெண்கள் உயிரிழப்பு..

சென்னை அருகே அம்மா உணவகத்தில் சீலிங் இடிந்து விழுந்ததால் பரபரப்பு... பெண் காயம்

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments