Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரசிகர்களுக்கு கமல்ஹாசன் திடீர் எச்சரிக்கை

Advertiesment
ரசிகர்களுக்கு கமல்ஹாசன் திடீர் எச்சரிக்கை
, ஞாயிறு, 7 ஜனவரி 2018 (22:20 IST)
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டரில் தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கலந்தாலோசிக்காது நமது இயக்கத்தார் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக ஆர்ப்பாட்டங்களில் இறங்கலாகாது. விதிகளை மதியாத இயக்கத் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையை தலைமைக்கு தயவாய் ஏற்படுத்தாதீர்கள். ஆக்க பூர்வமான வேலைகள் நிறைய இருக்கின்றன.

கடந்த சில நாட்களாக கமல்ஹாசனை விமர்சனம் செய்து வரும் டிடிவி தினகரனுக்கு எதிராக கமல்ஹாசன் ரசிகர்கள் ஆங்காங்கே கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒருசில இடங்களில் பேருந்து மறியல் சம்பவமும், போராட்டமும் நடந்ததாக கூறப்படுகிறது இதனையொட்டியே கமல்ஹாசன் இந்த டுவீட்டை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிவர்ஸ் எடுக்க தெரியாமல் ஒரே இடத்தில் ரவுண்ட் அடித்த தற்காலிக டிரைவர்: வைரல் வீடியோ!!