Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

18 வயது வாலிபனுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆயுதம்: கமல்ஹாசன் வீடியோ

Advertiesment
18 வயது வாலிபனுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆயுதம்: கமல்ஹாசன் வீடியோ
, வெள்ளி, 20 நவம்பர் 2020 (10:17 IST)
18 வயது முதல் கிடைக்கும் ஓட்டுரிமையை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றும் இது 18 வயது வாலிபன் முதல் அனைவருக்கும் கிடைத்த மிகப்பெரிய ஜனநாயக ஆயுதம் என்றும் கமலஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் 
 
ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: 18 வயது பூர்த்தி செய்த ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் வாக்காளர் என்ற அடையாளம். அவனுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆயுதம் வாக்காளர் அடையாள அட்டை 
 
கடமையை சரிவர செய்யாதவர்கள் சமூகத்த்ஹில் தன்னோட உரிமைகளை இழப்பார்கள். மாற்றம் வேண்டும், சிஸ்டம் சரி இல்லை, எல்லாரும் திருட்டு பயல்கள் என்று கூறும் பல பேர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லை. நாம் எல்லோருக்கும் இந்திய தேர்தல் ஆணையம் கொடுக்கும் அடையாளம் வாக்காளர் அடையாள அட்டை
 
நவம்பர் 21, 22 தேதிகளில் அல்லது டிசம்பர் 12 13 தேதிகளில் உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் வாக்குச்சாவடியில் நடைபெறும் சிறப்பு முகாமுக்கு சென்று வாக்காளர் அடையாள அட்டை குறித்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை பெறுங்கள்’ என்று கமல்ஹாசன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெங்களூரில் டேரா போட்ட வக்கீல்? தாமதமாகிறதா சசிகலா விடுதலை...