Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: கமல்ஹாசன் டுவிட்!

Advertiesment
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: கமல்ஹாசன் டுவிட்!
, வியாழன், 1 ஜூலை 2021 (19:25 IST)
மருத்துவர் தினம் நாடெங்கும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலின் உள்பட பல பிரபலங்கள் மருத்துவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் இரவு பகல் பாராமல் உழைக்கும் அரசு மருத்துவர்களின் இன்னல்களை கருத்தில் கொண்டு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்
 
பெருந்தொற்று தீவிரமடைந்த சூழலில் ஓராண்டுக்கும் மேலாக உயிரை பணயம் வைத்து தன்னலமற்ற சேவை ஆற்றி வருகிறார்கள் நமது மருத்துவர்கள் என்றும் அவர்கள் அனைவருக்கும் மருத்துவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கமலஹாசன் அதில் தெரிவித்துள்ளார் 
 
அரசு மருத்துவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொள்ளாமல் தமிழ்நாடு அரசு சிலருக்கு மட்டுமே ஊதியம் வழங்கி இருப்பது ஏமாற்றமளிக்கிறது என்றும் இரவு பகல் பாராமல் உழைக்கும் அரசு மருத்துவமனைகளில் கருத்தில் கொண்டு அவர்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோயில் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்- அமைச்சர் தகவல்