Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எனக்கு அழகாக ப்ரபோஸ் செய்யும் வீடியோவை அனுப்புங்கள்… ரசிகர்களுக்கு ராஷ்மிகா கோரிக்கை!

எனக்கு அழகாக ப்ரபோஸ் செய்யும் வீடியோவை அனுப்புங்கள்… ரசிகர்களுக்கு ராஷ்மிகா கோரிக்கை!
, வியாழன், 1 ஜூலை 2021 (15:55 IST)
நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்கள் தனக்கு ப்ரபோஸ் செய்யும் க்யூட் வீடியோக்களை அனுப்ப கேட்டுள்ளார். தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. படங்களில் மட்டுமில்லாமல் சமூகவலைதளங்களிலும் இவர் ஒரு சூப்பர் ஸ்டார்தான். அந்த அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இத்தனைக்கும் தமிழில் அவர் நடித்த சுல்தான் படம் மட்டுமே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகவலைதளங்கள் மூலமாக தொடர்ந்து ரசிகர்களோடு இணைப்பில் இருக்கும் ராஷ்மிகா ரசிகர் ஒருவர் உங்களை திருமணம் செய்ய என்ன செய்ய வேண்டும் எனக் கேட்ட கேள்விக்கு ‘அழகாக ப்ரபோஸ் செய்யும் வீடியோவை எனக்கு அனுப்புங்கள்’ என கூலாக கூறியுள்ளார். இதைக் கேட்டு எத்தனை ஆயிரம் பேர் வீடியோக்களை அனுப்பப் போகிறார்களோ?
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேவயானியை திருமணம் செய்ய முயன்ற மூத்த நடிகர்… அதுவும் ரெண்டு குழந்தைக்கு அப்பாவான பின்னர்!