Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வரை சந்திக்கிறார் கமல்.. 2 தொகுதிகளை கேட்பதாக தகவல்

Advertiesment
kamal- mk stalin

Siva

, புதன், 7 பிப்ரவரி 2024 (15:39 IST)
கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தற்போது அமெரிக்காவில் உள்ள கமல்ஹாசன் சென்னை திரும்பியதும், முதல்வரை சந்திக்க இருப்பதாகவும், அனேகமாக வரும் 12ஆம் தேதி சென்னை திரும்பும் கமல்ஹாசன் அடுத்த நாளே முதல்வரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் 2 தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியானாலும், இதுவரை அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறாத நிலையில், 12ஆம் தேதிக்கு பின் பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு உள்ளது.
 
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை 10 தொகுதிகள் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆறு தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிகிறது. எனவே அதில் கிடைக்கும் நான்கு தொகுதிகளில் இரண்டு தொகுதிகளை கமல்ஹாசனுக்கும் இரண்டு தொகுதிகளை திமுகவே கூடுதலாக போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

11 வயது, 12 வயது மகள்களுக்கு பாலியல் தொல்லை.. தந்தைக்கு 123 வருடங்கள் சிறைத்தண்டனை..!