கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்தில் பணி செய்து கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் சொந்த மாநிலத்தை நோக்கி சென்று விட்டனர்
இந்த நிலையில் தற்போது மீண்டும் தொழில்கள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ள நிலையில் வட மாநில தொழிலாளர்கள் தமிழகம் திரும்பாததால் பணிகள் முழுமையாக நிறைவேறாமல் உள்ளன
அதிக ஆர்டர் இருந்தும் போதிய தொழிலாளர்கள் இல்லாமல் தொழில்துறையினர் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கொங்கு மண்டலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் இது குறித்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
கொங்கு மண்டலத்தில் ஆர்டர்கள் இருந்தும் போதிய தொழிலாளர்கள் இல்லாமல் தொழில்துறையினர் தவித்து வருகின்றனர். லாக்டவுணில் வெளியேறிய வட மாநில தொழிலாளர்களை அழைத்து வர சிறப்பு ரயில்கள் தேவை எனும் நியாயமான கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்.