Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடாத மழையிலும் விடாது ஒலிக்கும் ‘நாளை நமதே’: கமல்ஹாசன் டுவீட்

Advertiesment
அடாத மழையிலும் விடாது ஒலிக்கும் ‘நாளை நமதே’: கமல்ஹாசன் டுவீட்
, புதன், 13 ஜனவரி 2021 (09:41 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. ஏற்கனவே நான்கு கட்ட பிரசாரத்தை முடித்துவிட்டு ஐந்தாம் கட்ட பிரச்சாரத்தை தற்போது செய்து வரும் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய மக்கள் வரவேற்பு இருக்கிறது என்பதும் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதும் தெரிய வருகிறது 
 
இந்த நிலையில் பொள்ளாச்சியில் இன்று கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அங்கு தற்போது நல்ல மழை பெய்து கொண்டிருந்த போதிலும் மழையில் நனைந்தவாறும், குடை பிடித்துக் கொண்டும் கமல்ஹாசனை பார்க்கவும் அவரது பேச்சைக் கேட்கவும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பொள்ளாச்சியில் அடாது பெய்யும் மழையிலும், விடாது ஒலிக்கிறது நாளை நமதே எனும் முழக்கம். இனி நன்மைகளே தமிழகத்தில் நடக்கும். வெற்றி எமதே

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யார்க்கிட்ட காசு கேக்குற.. அமித்ஷாகிட்ட பேசுறியா? – சிக்கன் ரைஸுக்காக அல்பமாய் பேசிய பாஜகக்காரர்!