Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசுவதாக கமல்ஹாசன் சூசகம்

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (17:47 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என அனைவரும் கூட்டணி பேரத்தில் இறங்கி வெற்றிகரமாக காய்நகர்த்தி வருகின்றனர். இதில் அதிமுக மெகா கூட்டணி  என்ற பெயரில் பாஜக, பாமகவுடன் கூட்டணி வைத்துள்ளது. திமுக காங்கிரஸ் மற்றும் மதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. 
இந்நிலையில் தேமுதிக கட்சியுடன் கூட்டணி கைக்க அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் முயன்று வருகின்றன. இந்நிலையில் தற்போது கமல்ஹாசனும் தேமுதிகவுடன் பேச வாய்ப்பிருந்தால் கூட்டணி குறித்து பேசப்போவதாக அறிவித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறியதாவது : ரஜினிகாந்துடன் எப்போது வேண்டுமனாலும் பேசுவேன். அதற்கு உடலும் மனமும் இருக்கிறது. தேமுதிகவுடன் கூட்டணி குறித்து வாய்ப்பு இருந்தால் பேசுவோம். சில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
 
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்துதான் போட்டியிடுவோம். ஒரு வேளை தனித்து நின்று  போட்டியிடும் சுழல் வந்தால் தனியாகவும் போட்டியிடுவோம்.
 
பாராளுமன்ற  தேர்தலில் போட்டியிட இந்த மாதம் 28 ஆம் தேதி  முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை விருப்ப மனு படிவம் அளிக்கப்படும்.
 
இந்த விரும்ப மனுவுக்கு ரூ.10 ஆயிரம் கட்டி பெற்றுக்கொள்ளலாம் எங்கள் கட்சி அல்லாது மக்கள் நலனுக்காக சிறந்த எம்பி. ஆக  வர நினைப்பவர்களும் இதை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எதிரொலி: இன்று நடக்கவிருந்த என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு?

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments