Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யார்க்கிட்ட காசு கேக்குற.. அமித்ஷாகிட்ட பேசுறியா? – சிக்கன் ரைஸுக்காக அல்பமாய் பேசிய பாஜகக்காரர்!

Advertiesment
யார்க்கிட்ட காசு கேக்குற.. அமித்ஷாகிட்ட பேசுறியா? – சிக்கன் ரைஸுக்காக அல்பமாய் பேசிய பாஜகக்காரர்!
, புதன், 13 ஜனவரி 2021 (09:20 IST)
சென்னையில் உணவகம் ஒன்றில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதற்கு காசு தராமல் அமித்ஷாவை இழுத்து பேசிய பாஜகக்காரரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

சென்னை திருவெல்லிக்கேணியில் உள்ள அசைவ உணவகம் ஒன்றில் பாஜகவை சேர்ந்த புருசோத் என்பவர் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார். அதற்கு கடைக்காரர் காசு கேட்டபோது காசு தர மறுத்ததுடன், தான் பாஜக ஆள் என்றும், அமித்ஷாவிற்கு போன் செய்து காலி செய்துவிடுவேன் என்றும் மேலும் பல அநாகரிகமான வார்த்தைகளாலும் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெறும் ஒரு சிக்கன் ரைஸுக்காக அமித்ஷா வரை இழுத்து விடுகிறாரே இவர் என பாஜகவினரே குறைப்பட்டு கொண்டுள்ள நிலையில் குறிப்பிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தற்போது கொலை மிரட்டல் விடுத்த பாஜக திருவெல்லிக்கேணி பகுதி செயலாளர் புருசோத்தமன் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

க்யூபாவை பயங்கரவாத நாடாக அறிவித்த அமெரிக்கா! – கிளம்பும் முன் ட்ரம்ப் பார்த்த வேலை!