Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்: கமல் இன்று ஆலோசனை

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்: கமல் இன்று ஆலோசனை
, வெள்ளி, 25 ஜூன் 2021 (07:41 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கும் மற்ற நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கும் தமிழகம் முழுவதும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்தி வருவதால் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் நாளை தனது கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது
 
நாளை காலை 11 மணிக்கு காணொளி வாயிலாக கமல்ஹாசன் நடத்தும் இந்த ஆலோசனையில் கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை இந்த ஆலோசனைக்கு பின்னர் இது குறித்த விரிவான அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10, 12 தேர்வு ரத்து என்ற முடிவை ஆந்திர அரசு எடுத்தது ஏன்?