Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர போதை ஆண்டவா... எதையும் தெளிவா சொல்லமாட்டேளா ? கொரோனா குறித்த கமல் கவிதை ட்ரோல்!

Webdunia
திங்கள், 30 மார்ச் 2020 (10:57 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்டநூற்று கணக்கான  நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த வைரஸ் குறித்து பல்வேறு பிரபலங்கள் தங்களது கருத்துக்களை விழிப்புணர்வாக தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"வாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும்?

ஏழ்மை கற்பிக்காததை இறைவனா கற்பிப்பான்?

ரோகம் கற்பிக்காததை மோகமா கற்பிக்கும்?

தாகம் கற்பிக்காததை தடாகமா கற்பிக்கும்?

வாழ்…

ஏழ்மை இழிவன்று

அது செல்வத்தின் முதல் படி

தாகத்துடன் நட, தடாகம் தென்படும்

மோகமும், சாவதும், இறைவனும் இன்றியமையாததன்று

போவதும் வருவதும் போக்குவரத்தன்றி

வேறென்ன சொல்லு தோழா! தோழி!”

உங்கள் நான்

கமல் ஹாசன். என்று கூறி முடித்துள்ளார்.

இது எப்போதும் போலவே பலருக்கும் புரியவில்லை என கூறி ஆளாளுக்கு கமெண்ட்ஸ் செய்து வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments