Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்த கமல்

Advertiesment
, சனி, 16 டிசம்பர் 2017 (11:37 IST)
உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த 'தூங்காவனம்' படத்திற்கு பின்னர் வேறு எந்த படமும் வெளிவரவில்லை. இதனால் தனது பெயர் ஊடகங்களில் பரபரப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது அரசியல் டுவீட்டுகளை அள்ளிவிட்டு கொண்டு வருகிறார். அதிலும் கவனமாக தேசிய கட்சிகளையும், மத்திய அரசையும் தாக்காமல், ஜெயலலிதா இல்லாத தமிழக அரசை மட்டும் தாக்கி டுவீட் பதிவு செய்துவருகிறார்
 
இந்த நிலையில் சற்றுமுன்னர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றுக்கொண்டார். இதுகுறித்து கமல் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: வாழ்த்துக்கள் ராகுல்காந்தி: உங்கள் பதவி உங்களை வரையறுக்காது ஆனால் உங்களால் உங்கள் நிலையை வரையறுக்க முடியும். உங்கள் மூதாதையர்களை நான் மரியாதையுடன் பார்த்தேன். நீங்களும் அதே முறையில் மரியாதை தரும் வகையில் அனைவரையும் நல்வழிப்படுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்கள் தோள்களில் தான் அனைத்து பலமும் உள்ளது' என்று கூறியுள்ளார்.
 
ஏற்கனவே கமல் கட்சி ஆரம்பித்தோ, அல்லது ஆரம்பிக்காமலோ காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்து கமல் பதிவு செய்துள்ள இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவில் திருடர்களால் சுட்டுக்கொள்ளப்பட்ட இந்தியர்