Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி, கமல் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (19:44 IST)
அதிமுக, பாஜக கூட்டணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக கருதப்படும் நிலையில் பாஜக தலைமையில் ஒரு புதிய கூட்டணி அமைக்க திரைமறைவு வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது
 
குறிப்பாக பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக, தமாக, ரஜினி, கமல், ஆகிய கட்சிகள் வர வாய்ப்பு இருப்பதாகவும், அதேபோல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட்கள், மற்றும் பிற கட்சிகளும் வரலாம் என்றும், அதிமுக மற்றும் திமுக தனித்துவிடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர் ஒருவர் இன்றைய தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 
இதனை நிரூபிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் என்றும், மக்கள் நலனுக்காக இணைவோம் என எந்த அர்த்தத்தில் ரஜினி, கமல் கூறியுள்ளனர் என தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே ரஜினியும் கமலும் பாஜகவின் பின்னணியில் இருந்து இயங்குபவர்கள் என்ற குற்றச்சாட்டு பொதுவாக இருந்து வரும் நிலையில் தற்போது அது மெல்ல மெல்ல உண்மையாகிறதோ என்ற சந்தேகம் அரசியல் பார்வையாளர்களுக்கு வந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா: 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்..!

ஈவிஎம் மெஷின்களில் குளறுபடிகள்! மகாராஷ்டிரத்தில் மறு தேர்தல் வேண்டும்: சிவசேனா கோரிக்கை

இன்று காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இரவில் பெய்த திடீர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை?

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments