Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்றும் ஆஸ்திரியா!

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (19:19 IST)
ஹாலோகாஸ்ட் என்ற நடவடிக்கை மூலம் பல லட்சம் யூதர்களை கொன்ற, இரண்டாம் உலகப் போரின் மையப் பேசுபொருளாக விளங்கிய நாஜித் தலைவர் அடால்ஃப் ஹிட்லர் பிறந்த கட்டடத்தை காவல் நிலையமாக மாற்றுதாக ஆஸ்திரிய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு, இந்த கட்டடம் நாஜிசத்தை நினைவுகூறும் வகையில் அமையாது என்ற சமிக்ஞையை வெளிப்படுத்துவதாக ஆஸ்திரிய உள்துறை அமைச்சர் வொல்ப்காங் பெஸ்கார்ன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
 
ஆஸ்திரியாவின் 'ப்ரனவ் ஆம் இன்' எனும் நகரிலுள்ள, 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கட்டடத்தில்தான் ஹிட்லர் தனது வாழ்வின் முதல் சில வாரங்களை வாழ்ந்தார்.
 
இந்த கட்டடத்தின் உரிமையாளருக்கும் அரசுக்கும் நடந்த மிக நீண்ட சட்டப்போராட்டத்தின் முடிவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
ஹிட்லரின் இந்த வீட்டுக்கு சுற்றுலாப்பயணிகள் வருவதை தடுக்கும் வகையில், இந்த கட்டடத்துக்கு வாடகை கொடுத்து பாதுகாத்து வந்த அரசாங்கம், இதே இடத்தில் அகதிகளுக்கான மறுவாழ்வு மையம் அமைப்பதற்கும், மொத்தமாக விலை கொடுத்து வாங்குவதற்கும், செப்பனிடுவதற்கும் மேற்கொண்ட முயற்சிகளை அந்த கட்டடத்தின் உரிமையாளர் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு கட்டாய விற்பனை உத்தரவின் மூலம் இந்த இல்லத்தை 8,10,000 யூரோக்களுக்கு அரசு கையகப்படுத்தியது.
 
அதன் பிறகு, இந்த கட்டடத்தை இடித்து விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறுபட்ட கருத்துகளை முன்வைத்து வந்த நிலையில், தற்போது இதை காவல்நிலையமாக மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

பஹல்காம் சுற்றுலா சென்ற 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. குற்றவாளிக்கு ஜாமின் மறுத்த நீதிமன்றம்..!

இன்னும் இரண்டே மாசம்தான்.. வருகிறது கிளாம்பாக்கம் ரயில் நிலையம்! - பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

அடுத்த 3 நாட்களுக்கு வெயில்.. அப்புறம் சில்லென்ற மழை! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments