Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமலும் ரஜினியும் சோளக்காட்டு பொம்மைகள்! ஓபிஎஸ்

Advertiesment
கமலும் ரஜினியும் சோளக்காட்டு பொம்மைகள்! ஓபிஎஸ்
, வெள்ளி, 19 ஜனவரி 2018 (22:12 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் அடுத்த மாதம் அரசியல் களத்தில் புதிய கட்சியுடன் களமிறங்கவுள்ளனர். மேலும் விஷால் மற்றும் விஜய் எந்த நேரமும் களமிறங்க காத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி பாக்யராஜ் உள்பட இன்னும் ஒருசிலரும் அரசியலில் நுழைய சரியான நேரத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலையில் ஒருசிலர் புதிய கட்சி தொடங்குகின்றனர் என யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் சோளக்காட்டு பொம்மைகள் என்றும், அதற்கு உயிர் இல்லை என்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார். அவர் கமல் மற்றும் ரஜினியைத்தான் சோளக்காட்டு பொம்மைகள் என்று கூறியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

மேலும் அதிமுகவை யாராலும் அசைக்க முடியாதபடி எஃகு கோட்டையாக ஜெயலலிதா வழங்கியுள்ளதாகவும், எனவே அதிமுக தொண்டர்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று ஓபிஎஸ் மேலும் கூறியுள்ளார். கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவரும் ஓபிஎஸ் கூறியது போல் சோளக்காட்டு பொம்மைகளா? அல்லது அதிமுகவுக்கு சோதனை தரும் தலைவர்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே கொடியின் கீழ் இரண்டு பகை நாடுகள்!