கள்ளக்குறிச்சி எம் எல் ஏ பிரபுவுக்கு கொரோனா உறுதி!

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (17:11 IST)
சமீபத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட அதிமுக எம் எல் ஏ பிரபுவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரபு. இவர் அதிமுக கட்சிக்காக போட்டியிட்டு 2016 ஆம் அனடு சட்டமன்ற உறுப்பினரானார். இந்நிலையில் இவர் சில மாதங்களுக்கு முன்னர் கல்லூரி மாணவி ஒருவரை சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டுள்ளார். அது மிகப்பெரிய சர்ச்சைகளைக் கிளப்ப நீதிமன்றம் வரை சென்று கணவன் மனைவி சேர்த்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இப்போது பிரபுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் காய்ச்சலுடன் இருந்துவந்தார். அதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்ட நிலையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments