Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: தவெக தலைவர் விஜய் கண்டனம்..!

Advertiesment
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: தவெக தலைவர் விஜய் கண்டனம்..!

Siva

, வியாழன், 20 ஜூன் 2024 (09:27 IST)
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து 30 பேர்கள் பலியானதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சம்பவத்திற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:
 
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
 
கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
 
இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பரபரப்பை ஏற்படுத்திய கள்ளச்சாராய பலி விவகாரம்.. கள்ளக்குறிச்சி விரைகிறார் ஈபிஎஸ்..!