Publish Date: Fri, 13 Mar 2026 (10:57 IST)
Updated Date: Fri, 13 Mar 2026 (11:00 IST)
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள்.. நாம் தமிழர் கட்சியில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வந்தார். திராவிட கட்சிகளுக்கு எதிராக அனல் பறக்க பேசியவர் இவர். நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு பின் சிறந்த பேச்சாளராக காளியம்மாள் பார்க்கப்பட்டார்.. இவருக்கு அந்த கட்சியில் பெரிய வரவேற்பும் இருந்தது..
ஆனால் இவர் தனித்து செயல்படுவதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சீமானிடம் புகார் சொல்ல சீமான் இவரை திட்டியதாக சொல்லப்பட்டது. அதில் அதிருப்தியடைந்த காளியம்மாள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார். கடந்த இரண்டு வருடங்களாக அவரை பற்றிய செய்திகள் வெளியாகவிலலி.
இந்நிலையில்தான் இன்று காலை சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து காளியம்மாள் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
2010ம் வருடம் முதல் அதிமுகவில் பொறுப்பில் இருந்தேன்.. ஒரு தமிழனின் தலைமையில் இயங்கவே அதிமுகவில் இணைந்திருக்கிறேன். அரசியலிலிருந்து விலகியிருந்தாலும் மக்கள் அரசியலில் இருந்து நான் விலகவில்லை. தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளை பேசி வந்தேன். போரட்டங்களில் கலந்துகொண்டேன். என் மகளை என் அம்மாவிடம் விட்டு விட்டுதான் அரசியலுக்கு வந்தேன். அம்மாவுடன் இருக்கமுடியவில்லை என்கிற ஏக்கம் அவர்களிடம் இருந்தது. அதனால்தான் இடைவெளி எடுத்தேன். அதிமுகவில் நான் எந்த பொறுப்பையும் கேட்கவில்லை. அதை தலைமை முடிவு செய்யும் என அவர் பேசியிருக்கிறார்.