தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவும் காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், அதேபோல் காரைக்கால் பகுதியில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிகிறது.
Edited by Siva