முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளார். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் இந்தக் கோரிக்கையை முன்வைத்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கும்பகோணம் மாவட்டத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்த நிலையில், இந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் தரும் வகையில், சட்டப்பேரவையில், கலைஞர் பல்கலைக்கழகத்தை குறித்த சட்ட மசோதாவை உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார். இந்த மசோதாவை தான் தற்போது கவர்னர் ஆர்.என்.ரவி, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், குடியரசு தலைவர் அனுமதி அளித்தால் விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.