Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்த காடுவெட்டி குரு மகன்: பாஜகவில் இணைகிறாரா?

பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்த காடுவெட்டி குரு மகன்: பாஜகவில் இணைகிறாரா?
, புதன், 19 பிப்ரவரி 2020 (11:13 IST)
பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்த காடுவெட்டி குரு மகன்
பாமகவின் முக்கிய பிரமுகரும் வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குரு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்த நிலையில் அவரது குடும்பத்தினர் பாமகவுக்கு எதிராக பேசி வந்தனர். குறிப்பாக காடுவெட்டி குருவின் மகனு குரு கனல் அரசனுக்கும் பாமகவிற்கும் கருத்துவேறுபாடு இருந்ததாகவும் அதனால் பாமகவை எதிர்த்து அவர் ஒரு சில கருத்துக்களை தெரிவித்த தாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் காடுவெட்டி குரு மகன் குரு.கனல் அரசன் வேறு ஒரு முக்கிய அரசியல் கட்சியில் சேரலாம் என்ற வதந்தி கடந்த சில வாரங்களாக எழுந்து வந்தது. இதனை அடுத்து சற்றுமுன் காடுவெட்டி குருவின் மகன் ஒரு குரு.கனல் அரசன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் சந்தித்து பொன்னாடை போர்த்தி உள்ளார் இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
காடுவெட்டி குருவின் மகன் குரு.கனல் அரசன் விரைவில் பாஜகவில் சேரலாம் என்றும் பாஜகவில் அவருக்கு முக்கிய பதவி கொடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பாஜகவுடன் இணக்கமாக பாமக இருந்து வரும் நிலையில் காடுவெட்டி குரு மகன் பாஜகவில் சேர்ந்தால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதை சொல்லி சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள்! – சீறிய எடப்பாடியார்!