Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பரிமாற்றம் வேறு, காழ்ப்புணர்வுடன் அபகரிப்பது வேறு.. கச்சத்தீவு விவகாரம் குறித்து ப சிதம்பரம்..!

Advertiesment
பரிமாற்றம் வேறு, காழ்ப்புணர்வுடன் அபகரிப்பது வேறு.. கச்சத்தீவு விவகாரம் குறித்து ப சிதம்பரம்..!

Siva

, திங்கள், 1 ஏப்ரல் 2024 (09:14 IST)
கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து உள்ளதை அடுத்து வரும் தேர்தல் பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கச்சத்தீவு விவகாரம் குறித்தும் இந்திய நிலங்களை சீனா ஆக்கிரமித்தது குறித்தும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

1974ஆம் ஆண்டில் இரு நாடுகளிடயே நடந்த பரிமாற்றத்தை திரு மோடி அவர்கள் இப்பொழுது ஏன் கிளப்புகிறார்?  கச்சத்தீவின் பரப்பளவு 1.9 சதுர கி்.மீ.  அதனைத் தந்து 6 லட்சம் இலங்கைத் தமிழர்களை மீட்டு அவர்களுக்குச் சுதந்திரமும் புது வாழ்வும் தந்தவர் இந்திரா காந்தி

திரு மோடி செய்தது என்ன? 2000 சதுர கி.மீ இந்திய பூமியைச் சீனா அபகரித்திருக்கிறது. "எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை" என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பைத் திரு மோடி நியாயப்படுத்தினார்

திரு மோடியின் பேச்சை சீனா உலகமெங்கும் பரப்பியது. சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது. நல்லுணர்வுடன் பரிமாற்றம் வேறு, காழ்ப்புணர்வுடன் அபகரிப்பது வேறு

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கிடையாது: இந்து மக்கள் கட்சி அதிரடி அறிவிப்பு..!