Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதே நிலை தொடர்ந்தால் ஒரே கட்சி ஒரே தலைவர் தான் இருப்பார்: ப சிதம்பரம் எச்சரிக்கை..!

Advertiesment
chidambaram

Siva

, வெள்ளி, 29 மார்ச் 2024 (14:44 IST)
தேர்தல் நேரத்தில் ஒரு மாநில முதல்வரை கைது செய்து சிறையில் அடைகின்றனர், இது நிலை தொடர்ந்தால் இந்தியாவில் ஒரே கட்சி ஒரே தலைவர் தான் இருப்பார் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை தேர்தல் சமயத்தில் சிறையில் அடைகின்றனர், இது ஜனநாயக ஆட்சியா? அல்லது சர்வாதிகார ஆட்சியா?
 
இதே நிலை தொடர்ந்தால் ஒரே கட்சி ஒரே தலைவர் தான் இந்தியாவில் இருப்பார். இது ஜனநாயகத்திற்கு வந்த பெரிய ஆபத்து, இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், இந்த தேர்தலில் வெற்றி தோல்வி என்பது கிடையாது. ஜனநாயகம் பிழைக்குமா? செத்துப் போகுமா? அதற்கு வாழ்வா? சாவா? அரசியல் சாசனம் இருக்குமா? இருக்காதா? என்ற கேள்வி தான் மக்கள் முன்னிலையில் எழுந்துள்ளது என்று கூறினார் 
 
ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீண்டும் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதும் அவருக்கு ஆதரவாக ப சிதம்பரம் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழிசை முன்பே காசு வேணும் என சொன்ன கராத்தே தியாகராஜன்/ பெரும் பரபரப்பு..!