Publish Date: Tue, 18 Jan 2022 (16:09 IST)
Updated Date: Tue, 18 Jan 2022 (16:10 IST)
திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக திரை உலக அரசியல் பிரபலங்களுக்கும் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்
அந்த வகையில் திராவிட கழக தலைவர் கி வீரமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
வீரமணி அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன