சிதம்பரம் கைது வழக்கில் அவரை வேண்டுமென்றே கைது செய்துவிட்டு பின்னர் அதற்கான காரணத்தை சிபிஐ தேடுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 21 ஆம் தேதிகைது செய்யப்பட்டார். சிபிஐ அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் பின்னர் மேலும் 5 நாட்கள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இப்போது அவர் டெல்லி சிபிஐ வளாகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.இதுவரை மூன்று முறை அவரது சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே எஸ் அழகிரி ‘ஒருவரைக் கைது செய்துவிட்டு காரணத்தை தேடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிமிடம் வரை சிபிஐயால், எந்த குற்றச்சாட்டையும் ப.சிதம்பரத்திற்கு எதிராக வைக்க முடியவில்லை. காரணம், எந்தக் குற்றச்சாட்டும் அவர் மீது இல்லை. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்’ எனக் கூறியுள்ளார்.