Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி அறிவிப்பு

Advertiesment
சென்னையில் மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி அறிவிப்பு
, சனி, 20 ஜூன் 2020 (17:46 IST)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி குறித்த அறிவிப்பை சற்றுமுன் மின்வாரியம் அறிவித்துள்ளது
 
ஜூன் 19 முதல் ஜூன் 30 முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஜூலை 15 ஆம் தேதி வரை அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்தலாம் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. இந்த கால அவகாசம் காரணமாக 4 மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
 
மேலும் கடந்த 19ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மின்  கணக்கீட்டு தேதி உள்ள நுகர்வோர்களுக்கு, முந்தைய மாத மின் கட்டணம் கணக்கிடப்படும் எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கட்டண வசூல்  மையங்கள்  வரும் 30 ஆம் தேதி வரை செயல்படாது என்றும், அதனால் இணையதளம் வாயிலாக மின் கட்டணத்தை செலுத்துமாறும் மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதே நேரத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு இந்த கால அவகாசம் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வந்தாரை வாழவைக்கும் சென்னையில் கொரோனாவும் வாழட்டும்: உதயநிதி டுவீட்