Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி சவுதாமணியை சிறைக்கு அனுப்ப மறுத்த நீதிபதி.. என்ன காரணம்?

கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி சவுதாமணியை  சிறைக்கு அனுப்ப மறுத்த நீதிபதி.. என்ன காரணம்?

Mahendran

, வியாழன், 7 மார்ச் 2024 (10:50 IST)
பாஜக பெண் நிர்வாகி சவுதாமணி என்பவர் சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியதாக நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவரை சிறைக்கு அனுப்ப நீதிபதி மறுத்து விட்டதாகவும் நிபந்தனை ஜாமீன் கொடுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக பெண் நிர்வாகி சவுதாமணி நேற்று தனது சமூக வலைதளத்தில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒரு பதிவு செய்ததாக கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்டார்.

முதல் தகவல் அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதி அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை என்று கூறி அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப மறுத்துவிட்டார். மேலும் சவுதாமணி ஜாமீன் கேட்டதை அடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி அவரை உடனடியாக விடுவித்தார். இதனால் சவுதாமணி  சிறைக்கு செல்லாமல் வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு குற்றச்சாட்டின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்போது அதில் போதுமான ஆதாரங்கள் இல்லாமல் பதிவு செய்ததால் நீதிபதி, சவுதாமணி விடுதலை செய்து விட்டதாக பாஜகவினர் கூறி வருகின்றனர்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் 400 ரூபாய் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரே வாரத்தில் ரூ.2000 உயர்ந்ததால் அதிர்ச்சி..!