Publish Date: Thu, 07 Mar 2024 (10:42 IST)
Updated Date: Thu, 07 Mar 2024 (10:43 IST)
கடந்த மார்ச் 1ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை 46,720 என விற்பனை ஆன நிலையில் இன்று அதாவது மார்க் 7ஆம் தேதி 48,720 விற்பனை ஆகி வருகிறது. இந்நிலையில் ஒரே வாரத்தில் சவரனுக்கு 2000 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 50 ரூபாயும் ஒரு சவரனுக்கு 400 ரூபாயும் உயர்ந்துள்ளது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ரூபாய் 6090 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 400 உயர்ந்து ரூபாய் 48,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6560 எனவும் ஒரு சவரன் ரூபாய் 52480 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 78.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது