இன்று திருமணம் ஆக உள்ள சிறைக்கைதி ஒருவருக்கு நேற்று ஜாமீன் வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தஞ்சையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக கைதாகி கடந்த ஒரு வாரமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனக்கு ஜனவரி 30ஆம் தேதி திருமணம் என்றும் அதனால் தனக்கு ஜாமின் வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி அவரை திருமணம் செய்யவிருக்கும் பெண்ணை அழைத்து வெங்கடேஷை திருமணம் செய்ய அவருக்கு சம்மதமா? என்று கேட்டார். அந்த பெண்ணும் சம்மதம் எனக் கூறியதை அடுத்து ’வெங்கடேசன் வாழ்க்கையில் திருமணம் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என தான் நம்புவதாகவும் எனவே அவருக்கு திருமணத்தை முன்னிட்டு ஜாமீன் வழங்குவதாகவும் உத்தரவிட்டார்
மேலும் மாலை 6 மணிக்கு மேல் ஜாமீனில் யாரையும் வெளியே விடுவதில்லை என்றாலும் இவருக்காக விதிவிலக்கு அளித்து அவரை உடனே ஜாமீனில் விடுவிக்க வேண்டுமென்றும் சிறைக் காவல் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இன்று திருமணம் நடக்க இருக்கும் வெங்கடேஷுக்கு நேற்று ஜாமீன் கிடைத்ததை அடுத்து இன்று அவருடைய திருமணம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது