அமைச்சராக செந்தில் பாலாஜி நீட்டிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
அமைத்து செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி எங்கே கூறினார் என மனுதாரருக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கில் அரசியல் சாசன அமைப்பின்படி தான் நாங்கள் செயல்பட முடியும் என்று தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கை பிற்பகலுக்கு தள்ளி வைக்கப் வைக்கப்படுவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்க செய்ய வேண்டும் என முதலமைச்சருக்கு ஆளுனர் கடிதம் எழுதினாரா? அப்படி கடிதம் எழுதியிருந்தால் அந்த கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி மனுதாரருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை தமிழ்நாடு அரசு நியமித்ததை எதிர்த்து வழக்கறிஞர் எம்எல் ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.