Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எம்.பி., எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.. காத்திருக்கும் அதிரடிகள்..!

Advertiesment
எம்.பி., எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.. காத்திருக்கும் அதிரடிகள்..!
, சனி, 23 டிசம்பர் 2023 (07:44 IST)
ஜனவரி 2 முதல் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பார் என தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 தமிழகத்தின் முன்னாள் இந்நாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை வழக்குகளை விசாரணை ஜனவரி 2 முதல் நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வர உள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.

முன்னாள் அமைச்சர் பொன்முடி,  தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ பெரியசாமி ஆகியோர்களை வழக்குகளும் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா வளர்மதி ஆகியோர்களின் வழக்குகளும்  மறு ஆய்வு செய்யும் விதமாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை செய்ய இருந்தார்

ஆனால் திடீரென அவர் மதுரைக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவர் ஜனவரி 2 முதல்  மேற்கண்ட வழக்குகளை விசாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  இதனால் 2024 ஆம் ஆண்டு பரபரப்பாக இருக்கும் என்று தெரிகிறது

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதி அமைச்சரா? தமிழ்நாட்டின் எதிரியா? அமைச்சர் மனோ தங்கராஜ்