தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக பாஜக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்து வரும் நிலையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் இதனால்தான் நீட்தேர்வு எனவே நாங்கள் எதிர்க்கிறோம் என்று பதிவு செய்து புள்ளி விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புள்ளி விபரங்கள் பின்வருமாறு: ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து
அரசு பள்ளிகளில்,தமிழ் வழியில்,போராடி படித்து மருத்துவராக கனவு காணும் மாணவர்களுக்கு நீட் எவ்வளவு பெரிய அநீதி என்பதை சொல்லும் திரு.ராஜன் கமிடியின் புள்ளிவிவரம். இதனால் தான் நீட் எனும் அநீதியை எதிர்க்கிறோம்
இந்த நிலையில் ஜோதிமணியின் டுவிட்டுக்கு அரசியல் விமர்சகர் சுமந்த்ராமன் அவர்கள் பதில் அளித்தபோது அப்போ ஏன் நீங்கள் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் பஞ்சாப் சத்தீஸ்கர் மாநில அரசுகள் நீட் தேர்வை எதிர்க்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு ஜோதிமணி எம்பி அவர்கள் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்