Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீட் தேர்வும் மத்திய - மாநில அரசு அரசியலும்!

நீட் தேர்வும் மத்திய - மாநில அரசு அரசியலும்!
, சனி, 18 செப்டம்பர் 2021 (10:11 IST)
நீட் தேர்வு விவகாரத்தில் திராவிட கட்சிகளின் அரசியல் காரணமாக மருத்துவம் படிக்க ஆர்வத்தில் உள்ள மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.

திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதன் கூட்டணியும், அதிமுகவும் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடி வருகின்றன. நீட் விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது என்றாலும்  நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்று மாணவர்களை இன்னும் நம்பவைத்துள்ளனர். தேசத்தின் வருங்கால அரசர்களாக இருக்கும் மாணவர்களுக்கு இந்த தவறான வாக்குறுதிகளை வழங்குதல் அவர்களின் சுயநல அரசியலில் வெளிபாடு. இதன் விளைவாக செப்டம்பர் 15 ஆம் தேதி வரை வரை 16 இளம் உயிர்கள் பறிபோய் உள்ளது. 
 
எம்ஜிஆர் காலத்தில் தொழில்முறை சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு, பொறியியல், மருத்துவம், கால்நடை, விவசாயம், மீன்வளம் போன்ற படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான தொழில்முறை படிப்பை தொடர லட்சக்கணக்கான மாணவர்கள் நுழைவுத் தேர்வு மூலம் பயனடைந்தனர். இதனைத்தொடர்ந்து அவரது அரசியல் வாரிசான ஜெயலலிதா 2005-ல் பொதுவான நுழைவுத் தேர்வை  முடிவுக்குக் கொண்டு வந்து ஒரு அரசாணையை வெளியிட்டார். 
 
ஆனால் இது சென்னை உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இது ஒரு மசோதாவாக  மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் நீதிமன்றம் மீண்டும் அதை ரத்து செய்தது. திமுக 2006-ல் ஆட்சிக்கு வந்த பின்னர் மாணவர்களை சேர்க்க ஒரு புதிய சட்டத்தை ஏற்றுக்கொண்டது. தகுதித் தேர்வுகளில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் சீட் வழங்குதல். இது ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று மார்ச் 7,  2007 -ல் சட்டமாகியது. 
 
இதிலும் சில சிக்கல் இருக்கதான் செய்தது. ஆம், மாணவர்கள் சேர்க்கைக்காக பல நுழைவுத் தேர்வுகளுக்கு அமர வேண்டியிருந்தது. சில நேரங்களில், தேதிகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. எனவே அதை ஒத்திவைக்க மாணவர்கள் நீதிமன்றங்களை நாடினர். பின்னர் மாணவர்களுக்கு உதவுவதற்காக ஐஐடி பொதுவான நுழைவுத் தேர்வை கொண்டு வந்தது. இந்தியாவில் 412 மருத்து கல்லூகளின் சேர்க்கைக்கு சுமார் 35 நுழைவுத் தேர்வுகள் இருந்தன. நுழைவுத் தேர்வுகள் என்ற கருத்து அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்துடன் தொடங்கியது.
 
பல மாநிலங்கள் 12 ஆம் வகுப்பு அடிப்படையில் மாணவர்களை அனுமதித்தனர். இதில் 2009-ல், சிம்ரன் ஜெயின் மற்றும் பலர் இதற்கு எதிராக ஒரு மனுவை தாக்கல் செய்தனர். இதன் விளைவாக 2010 டிசம்பரில் அனைத்து சேர்க்கைக்கும் உட்பட்ட நீட் தேர்வை நடத்த MCI ஒரு அறிவிப்பை வெளியிட்டது.  ஆம், நீட் தேர்வுக்கான 2010 அறிவிப்பு மே 2013 -ல் மட்டுமே அமல்படுத்தப்பட்டது. ஆனால், மருத்துவ பல்கலைக்கழகம், கல்லூரி உரிமையாளர்கள் நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினர். 
 
உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஏப்ரல் 11, 2016 அன்று நீட் தேர்வை அங்கீகரித்தது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு ஓரிரு வருடங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தவிர, பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் நீட் தேர்வை எந்த முணுமுணுப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் தமிழ்நாடு மட்டுமே சமூக நீதி என்ற பெயரிலும், கிராமப்புற மாணவர்களைப் பாதுகாப்பதற்காகவும் நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.
 
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி  சவுந்தர்யா, அரியலூர் மாவட்டம் சாத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி கனிமொழி,  20 வயது சேலம் இளைஞர் தனுஷ் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, 18 வயதான அனிதாவும் இதையே தான் செய்தார். மத்திய அரசின் அலட்சியம் மற்றும் பிடிவாதம் மாணவர்களை மரணத்திற்கு தள்ளியது.

நீட் தேர்வில் முறைகேடுகள் நடக்கவில்லை அதன் நிலைப்பாட்டை மாற்றவும். இது கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான வழக்கை மேலும் வலுப்படுத்துகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். 
 
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், திமுக எந்த தெளிவான நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. நீட் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை தேவையில்லாமல் குழப்புகிறது. நீட் ரத்து செய்யப்படும் என்று கூறும் திமுக, மாணவர்கள் போதுமான அளவு தயார் செய்ய முடியவில்லை என குறிப்பிட்டார். இந்தப் பின்னணியில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழ்நாட்டில் நீட்க்கு எதிரான மசோதாவை தாக்கல் செய்தது. 

webdunia
 



தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், நீட் தேர்வில் தமிழகத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் வெற்றி பெற்று வருகின்றனர். 2016 முதல் நீட் பிரச்சினை விவாதிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வை TN ரத்து செய்ய முடியாது என தெரிவித்தார். இவர் கூறியதை போல நீட் மசோதாவைப் பொருத்தவரை, எந்த மாநிலத்திற்கும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மனநிலையில் மோடி அரசு இல்லை என்பதே நிதர்சனம்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடிக்கு மாற்று ராகுல் இல்லை; மம்தாதான் – திரிணாமூல் காங்கிரஸ் எம்பி பேச்சு!