Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்பை காட்டிலும் தமிழக அரசிற்கு நற்பெயரை தேடி தரவேண்டும்

முன்பை காட்டிலும் தமிழக அரசிற்கு நற்பெயரை தேடி தரவேண்டும்
, செவ்வாய், 18 டிசம்பர் 2018 (14:42 IST)
தமிழகத்தில் ஊராட்சி தலைவர்கள் இல்லாத போதும் ஊராட்சி செயலாளர்கள் முன்பை காட்டிலும் தமிழக அரசிற்கு நற்பெயரை தேடி தரவேண்டும் என்ற எண்ணத்தில்  புதிய வேட்கையுடன் செயல்பட்டு  வருகிறோம் என்று தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் கரூரில் பேட்டியளித்தார்.



தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கரூர் மாவட்டத்தில் உள்ள துக்காட்சி ஊராட்சி  ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன்., தோகமலை ஊராட்சி ஒன்றியசெயலாளர் வெங்கடேஸ்வரன்., கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியசெயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் தெரிவித்த சங்கத்தின் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ்., தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் 12 ஆயிரத்து 524- ஊராட்சி செயலாளர்களுக்கு நிலையான ஊதியம் பெற வேண்டும் என்ற நோக்கோடு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு துவங்கபட்டது.இதன் மூலம் 25-ஆண்டு கால கோரிக்கையை ஊராட்சி செயலர்களுக்கு பதிவுறு எழுத்தர் நிலை ஊதிய அரசானையை கடந்த 30-ம் தேதியன்று தமிழக முதலமைச்சரும்., துணை முதலமைச்சரும் வழங்கி உள்ளார்கள்.

எனவே அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தி நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற  நோக்கோடு இன்று மாவட்ட செயற்குழு கூட்டத்தை நடத்தி உள்ளோம். மேலும்.,  உள்ளாட்சி துறை அமைச்சருக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.தொடர்ந்து பேசும் போது., உள்ளாட்சிகளில் பணியாற்றும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கலை ஒன்று திரட்டி வரும் பிப்ரவரி மாதம் கரூர் மாவட்டத்தில் மாநாடு நடத்த உள்ளோம் என்றார். மேலும்., ஊராட்சி தலைவர்கள் இல்லாத போதும் ஊராட்சிசெயலாளர்கள் முன்பை காட்டிலும் தமிழக அரசிற்கு நற்பெயரை தேடி தரவேண்டும் என்ற எண்ணத்தில் வேட்கையுடன் செயல்பட்டு வருகிறோம் என்றார்.
சி.ஆனந்தகுமார்

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வந்தாச்சு ஜியோனி... சியோமியுடன் பட்ஜெட் விலையில் போட்டா போட்டி