Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தந்தை, மகன் உயிரிழப்பு: நிதியுதவியை வழங்கியது தமிழக அரசு!

Advertiesment
தந்தை, மகன் உயிரிழப்பு: நிதியுதவியை வழங்கியது தமிழக அரசு!
, வெள்ளி, 26 ஜூன் 2020 (15:34 IST)
தந்தை, மகன் உயிரிழப்பு ரூ.20 லட்சம் நிதியுதவி அரசு சார்பில் இன்று வழங்கப்பட்டது. 
 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று வணிகர்கள் சங்கம் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல் சாத்தான்குளம் தந்தை மகனின் மரணத்தில் நீதி வேண்டும் என்று திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.
 
இந்த நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஜெயராஜ் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூபாய் 25 லட்சம் நிவாரணம் அளிக்க உள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
ஏற்கனவே சாத்தான்குளம் சம்பவத்தில் மரணமடைந்த தந்தை மகன் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியும் அவர்களது குடும்பத்தினருக்கு அரசுப் பணியும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்திருந்தார். 
 
அதன்படி தந்தை, மகன் உயிரிழப்பு ரூ.20 லட்சம் நிதியுதவி இன்று வழங்கப்பட்டது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாத்தான்குளம் சம்பவம்: ஜெயம் ரவி, இமான், குஷ்பூ, பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் என்ன சொல்கிறார்கள்?