Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதாவின் பையனூர் பங்களாதான் பஞ்சமி நிலம்: முக ஸ்டாலின் அதிரடி

ஜெயலலிதாவின் பையனூர் பங்களாதான் பஞ்சமி நிலம்: முக ஸ்டாலின் அதிரடி
, வியாழன், 24 அக்டோபர் 2019 (08:12 IST)
தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் வெளியானதில் இருந்து பஞ்சமி நிலம் குறித்த சர்ச்சையும் ஆரம்பமாகிவிட்டது. குறிப்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் டுவிட்டரில் இதுகுறித்து மோதி வருகின்றனர். இந்த நிலையில் முக ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெயலைதாவின் பையனூர் பங்களாதன பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று கூறி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
பொய்மையையே மூலதனமாக வைத்து, அரசியல்‌ வியாபாரம்‌ நடத்தி வரும்‌ மருத்துவர்‌ அய்யா ராமதாஸ்‌, திடீரென கற்பனையான ஒரு ஆராய்ச்சி நடத்தி, தற்போது “முரசொலி” அலுவலகம்‌ இருக்குமிடம்‌ பஞ்சமி” நிலம்‌ என ஒரு செய்தி வெளியிட்டார்‌. அது “பஞ்சமி” நிலமல்ல; “பட்டா நிலம்‌ என்பதை அஆதாரத்துடன்‌ வெளியிட்டு, அது பஞ்சமி நிலமென்பதை மருத்துவர்‌ அய்யா நிரூபித்தால்‌, நான்‌ அரசியலை விட்டு விலகத்‌ தயார்‌; அப்படி நிரூபிக்காவிடில்‌ மருத்துவர்‌ ராமதாஸ்‌ அவர்களும்‌, அவரது மகன்‌ அன்புமணியும்‌ அரசியலை விட்டு விலகத்‌ தயாரா? என நான்‌ அறைகூவல்‌ விடுத்திருந்தேன்‌.
 
அதனை ஏற்றிட முன்வராத மருத்துவர்‌, முரசொலி அலுவலகம்‌ உள்ள இடம்‌ பஞ்சமி நிலம்‌ என்பதற்கான எந்த ஆதாரத்தையும்‌ வெளியிடாமல்‌, விவகாரத்தைத்‌ திசை திருப்ப முயன்று, “மூலப்‌பத்திரத்தை வெளியிடவில்லை; பட்டாவை மட்டும்‌ வெளியிட்டுள்ளனர்‌” என்று அறிக்கை விட்டார்‌. மருத்துவர்‌ இராமதாஸ்‌ நான்‌ விடுத்த அறைகூவலுக்கு எந்தப்பதிலும்‌ சொல்லாமல்‌ வாய்‌ மூடி மவுனமானார்‌.
 
இப்போது, ஆதி திராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில்‌, பாரதீய ஜனதாவின்‌ மாநிலச்‌ செயலாளர்‌ டாக்டர்‌ சீனிவாசன்‌, இதுகுறித்து விசாரிக்க வேண்டும்‌ என்று ஒரு மனு தந்துள்ளதாக தனது “டிவிட்டர்‌” பக்கத்தில்‌ பதிவு செய்து, அது செய்தியாக ஊடகங்களில்‌ வருகிறது! மருத்துவர்‌ இராமதாஸ்‌ கூற்றை நம்பி, மண்‌ குதிரையில்‌ ஏறி ஆற்றில்‌ இறங்கியுள்ளார்‌ சீனிவாசன்‌ ! அவருக்காக அனுதாபப்படுகிறேன்‌! மருத்துவர்‌ இராமதாசின்‌ கைப்பாவையாகி செயல்படத்‌ தொடங்கி யுள்ள சீனிவாசனுக்கு ஒன்று சொல்லிக்‌ கொள்ள விரும்புகிறேன்‌. துளி கூட உண்மையில்லா, ஜமுக்காளத்தில்‌ வடிகட்டிய ஒரு பொய்‌ குறித்து ஆதி திராவிடர்‌ தேசிய ஆணையத்துக்குச்‌ சென்று, நேரத்தை வீணடிப்பதைவிட, அவர்‌ இப்போது கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க. வின்‌ முன்னாள்‌ தலைவி செல்வி ஜெயலலிதாவினால்‌, பையனூரில்‌ பங்களா கட்ட கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்ட பஞ்சமி நிலத்தைக்‌ கைப்பற்றும்‌ முயற்சியில்‌ மருத்துவர்‌ அய்யாவுடன்‌ இணைந்து செயல்பட்டால்‌ ஏதாவது பலனாவது கிடைக்கும்‌ என்பதைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.
 
இப்போதும்‌ காலம்‌ கடந்து விடவில்லை; மருத்துவர்‌ ராமதாஸ்‌ அவர்களுக்கு நான்‌ ஏற்கனவே விடுத்த அறைகூவலை இப்போதும்‌ வலியுறுத்துகிறேன்‌. முரசொலி அலுவலகம்‌ இருக்குமிடம்‌ “பஞ்சமி”
நிலம்‌ என்பதை நிரூபிக்க, மருத்துவர்‌ ராமதாஸ்‌ முன்‌ வருவாரா? அவரது கைப்பாவையாகச்‌ செயல்படும்‌ சீனிவாசன்‌, ராமதாசை வலியுறுத்த முன்வருவாரா ?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா மீது மலேசியா உலக வர்த்தக நிறுவனத்தில் புகார் செய்கிறதா? மகாதீர் என்ன சொல்கிறார்?