Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள்; அ.தி.மு.க. அலுவலகத்தில் பிரம்மாண்ட சிலை திறப்பு

ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள்; அ.தி.மு.க. அலுவலகத்தில் பிரம்மாண்ட சிலை திறப்பு
, சனி, 24 பிப்ரவரி 2018 (08:23 IST)
மறைந்த முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலை இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 24 பிப்ரவரி 1948 ஜெயராம் மற்றும் வேதவள்ளி தம்பதியருக்கு மகளாக மைசூரில் பிறந்தார். ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமலவள்ளி. ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என். டி. ராமராவ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். 
 
1981ல் அதிமுக. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின்னர் 1989-ல் அதிமுகவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார். ஜெயலலிதா  தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார்.
 
2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி முதல் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இறந்தார்.
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 7 அடி வெண்கல சிலை திறக்கப்பட உள்ளது. ஜெயலலிதாவின் சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து திறந்துவைக்க உள்ளனர். மேலும் ‘நமது அம்மா’ என்ற நாளிதழை அறிமுகம் செய்துவைக்கின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேலும் ஒரு வங்கி மோசடி: ரூ.389 கோடி மோசடி செய்ததாக பிரபல நிறுவனம். சிபிஐ வழக்குப்பதிவு