Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்பல்லோவில் ஆவேசமடைந்த ஜெயலலிதா?

அப்பல்லோவில் ஆவேசமடைந்த ஜெயலலிதா?

Advertiesment
அப்பல்லோவில் ஆவேசமடைந்த ஜெயலலிதா?
, புதன், 28 செப்டம்பர் 2016 (08:49 IST)
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டார் எனவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள அவர் இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 
 
அதிகாரிகளுடன் ஆலோசனை, அரசு உத்தரவுகள் போன்றவற்றை மருத்துவமனையில் இருந்தே பிறப்பித்து வருகிறார்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் என்ன செய்கிறார் போன்ற சில, சில தகவல்கள் செய்திகளில் வருகின்றன. பிரபல தமிழ் வார இதழ் ஒன்று வெளியிட்ட செய்தியில் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அவரை கவனித்துக்கொள்ளும் நர்சுகளிடம் கோபப்படதாக கூறப்பட்டுள்ளது.
 
அதில், முதல்வர் ஜெயலலிதாவை கவனித்துக்கொள்ள ஷிஃப்ட்டுக்கு மூன்று நர்சுகள் வீதம் பணியில் இருக்கின்றனர். நேற்று முன்தினம் முதல்வருக்கு மாத்திரைகளைக் கொடுப்பதற்காகச் சென்ற நர்ஸிடம், இது என்ன மாத்திரை? சிவக்குமார் எங்கே? அவரை வரச் சொல்லுங்கள் எனக் கோபமாக கூறியிருக்கிறார். சிவக்குமார் முதல்வரின் பிரத்யேக மருத்துவர். சீகிரமாக முதல்வர் வீட்டுக்கு செல்லவே இப்படி ஆவேசப்படுகிறார் என பேசப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாரும் நெருங்க முடியாத இடத்தில் சானியா மிர்சா!