Publish Date: Wed, 21 Dec 2016 (11:49 IST)
Updated Date: Wed, 21 Dec 2016 (16:56 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவால் அதிமுகவை வழிநடத்த முடியும் என ஜெ.வின் அண்ணன் மகன் தீபக் பேட்டியளித்துள்ளார்.
ஜெ.வின் அண்ணன் மகள் தீபா, சசிகலா மீது ஏராளமான புகார்களை கூறிவரும் வேளையில், அவரின் சகோதரர் தீபக், சசிகலாவிற்கு ஆதரவாக பேட்டியளித்துள்ளார்.
இன்று காலை ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த திபக் “எனது அத்தை ஜெயலலிதா, சசிகலா மூலம் எங்கள் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். அதை யாரும் தடுக்கவில்லை. எங்களுக்கு தேவையானவற்றை ஜெயலலிதாவும், சசிகலாவும் சேர்ந்தே கவனித்து வந்தார்கள்.
இத்தனை வருடங்களாக எனது அத்தையுடன் சசிகலா இருந்துள்ளார். அவரால்தான் அதிமுக-வை வழிநடத்திச் செல்ல முடியும். யார் தலைமை என்பதை நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்றாலும், சசிகலாவை தேர்ந்தெடுத்தால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
மேலும், நான் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. எனது சகோதரி தீபா பொறுமை காக்க தவறி விட்டார்” என அவர் கூறினார்.
தனது சகோதரி தீபாவின் கருத்திற்கு எதிர்மறையான கருத்தை தீபக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.