Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெ.வின் கால்கள் அகற்றப்பட்டதா? - டிரைவர் விளக்கம்

ஜெ.வின் கால்கள் அகற்றப்பட்டதா? - டிரைவர் விளக்கம்
, வியாழன், 8 மார்ச் 2018 (15:51 IST)
சிகிச்சையின் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்படவில்லை என அவரிடம் ஓட்டுனராக பணிபுரிந்த ஐயப்பன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை சசிகலா குடும்பத்தினர் தவிர வேறு யாரும் பார்க்கவில்லை. மேலும், ஆளுநர் உட்பட யாரையும் அவரை பார்க்க சசிகலா தரப்பு அனுமதிக்கவில்லை. எனவே, அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது. மேலும், சிகிச்சையின் போது அவரின் கால்கள் வெட்டப்பட்டன எனவும் செய்திகள் வெளியாகின.
 
எனவே, அவரின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்பின், ஜெ.விற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டனில் பணிபுரிந்தவர்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல், 1991ம் வருடம் முதல் ஜெ.விடம் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த கண்ணன் சமீபத்தில்  விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.  
 
அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5வது நாள் ஜெயலலிதாவை பார்த்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது காரில் பின்னால் சென்றதாகவும் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
இந்நிலையில், ஜெ.விடம் ஓட்டுனராக பணிபுரிந்த ஐயப்பன் என்பவர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவருடைய பொருட்களை அங்கு எடுத்து சென்றேன். 
 
அப்போது அவசர சிகிச்சை பிரிவில் அவரைப் பார்த்தேன். முதலில் மருத்துவமனை செல்ல ஜெ. மறுத்தார். அதன் பின் அவர் மயங்கிய பின்பே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு முக்கால் மணி நேரம் கழித்து அவருக்கு நினைவு திரும்பியது. அதேபோல், அவரது கால்கள் வெட்டப்படவில்லை. அவர் மரணமடைந்த பின் நான்தான் அவரின் கால் விரல்களை கட்டினேன்” என அவர் பேட்டியளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹதியா திருமணம் செல்லுமா? சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு