ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலிக்கு முழுக்கு போடுவதாக் அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக முக்கிய தலைகள் தலைதூக்கி செய்த அராஜகங்கள் ஒருபுறம் என்றால், ஜெயலலிதாவின் ரத்த வாரிசு என்ற பெயரில் அவரின் அண்ணன் மகள் ஜெ தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் செய்த அலப்பறைகள் தமிழக அரசியலில் அனைவருக்கும் பொழுதுபோக்காக அமைந்தது.
அதிமுகவின் மீது கொண்ட அதிருப்தியால் புதிதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பைத் துவங்கினார் ஜெ தீபா. அதன் பின்னர் இடையில் அதிமுகவில் இணைந்து செயல்பட விரும்புவதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக ஜெ தீபா தெரிவித்தார்.
இந்நிலையில் அவர் அரசியலுக்கு முழுக்கு போடுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து ஜெ தீபா தெரிவித்துள்ளது பின்வருமாறு, எனக்கென்று ஒரு குடும்பம் உள்ளது. எனது குடும்பம்தான் எனக்கு முக்கியம். குழந்தை பெற்றுக்கொண்டு கணவருடன் வாழ வேண்டும் என்பதே எனது ஆசை.
எனக்கு அரசியலே வேண்டாம். என்னை தொலைப்பேசியில் அழைக்காதீர்கள். மீறி அழைத்தால் போலீஸில் புகார் அளிப்பேன். அதேபோல் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைத்து விட்டேன். விருப்பம் உள்ளவர்கள் அதிமுகவில் இணையலாம்.
முழுமையாக பொது வாழக்கையில் இருந்து விலகுகிறேன். எனவே தீபா பேர்வை என்ற பெயரில் யாரும் என்னை தொந்தரவு செய்து கஷ்டப்படுத்தாதீர்கள் என தெரிவித்துள்ளார்.