Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகனை நினைத்து ஏங்கும் முதல்வர் ஜெயலலிதா!

மகனை நினைத்து ஏங்கும் முதல்வர் ஜெயலலிதா!
, திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (16:56 IST)
ஹைதராபாத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் திராட்சைத் தோட்டத்தை ஜெயராமன் என்பவர் கவனித்துக் கொண்டிருந்தார்.


 


அவர் மின்சாரம் தாக்கி இறந்ததால், அவரின் மனைவி இளவரசியையும் அவரது மகன் விவேக்கையும் போயஸ் கார்டனுக்குள் ஜெயலலிதா அழைத்துக் கொண்டார். விவேக், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாகவே அறியப்பட்டார். ஜெயலலிதாவும் அவரை, அப்படித்தான் அனுகினார். விவேக், ஜாஸ் சினிமாஸ் என்ற சினிமா நிறுவனத்தை வைத்திருக்கிறார்.

சமீபத்தில் அவருக்கு திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்திற்கு ஜெயலலிதாவால் போக முடியவில்லை. அதனால் அவர் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. காரணம், அவர் திருமணம் செய்துக்கொண்ட பெண்ணின் தந்தை மீது செம்மரக்கடத்தல் வழக்கு இருப்பதால் அந்த திருமணத்திற்கு போக வேண்டாம் என்று உளவுத்துறை ஜெயலலிதாவை எச்சரித்துள்ளது.

webdunia

 


அதனால், ஜெயலலிதா விவேக்கின் திருமணத்தில் கலந்துக்கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. ஜெயலலிதா, விவேக்கை கைக்குழந்தையில் இருந்ததே வளர்த்து வந்தும் அவரின் திருமணத்தில் கலந்துக்கொள்ள முடியாத ஏக்கத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பச்சமுத்து கைது விவகாரத்தில் பாஜக தலையிடாது: எச்.ராஜா