பச்சமுத்து கைது விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவரும், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவருமான பச்சமுத்து, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பிற்கு சீட் வாங்கித் தருவதாகவ பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார்.
செப்டம்பர் 9ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பச்சமுத்து கைது விவகாரத்தில் பாஜக தலையிடாது என்று அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
மேலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்றார்.