Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுபான்மையினர் ஓட்டுக்களை இழந்ததா அதிமுக? ஜெயகுமார் பதில்

Advertiesment
சிறுபான்மையினர் ஓட்டுக்களை இழந்ததா அதிமுக? ஜெயகுமார் பதில்
, வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (11:02 IST)
பாஜகவுடனான கூட்டணியால் அதிமுகவிற்கு சிறுபான்மையினர் ஓட்டுக்கள் கிடைப்பதில்லை என்பது பொய் என ஜெயகுமார் பேட்டி.

 
தற்போது ரம்ஜான் மாதம் என்பதால் அதிமுக சார்பில் சென்னையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, ஜெயகுமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 
 
இஸ்லாமியர்களுக்கு அதிமுக என்றும் உறுதுணையாக இருந்து உள்ளது. சிறுபான்மையினர் நலனில் திமுக எப்போதும் இரட்டை வேடம் மட்டுமே போடுகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால்தான் அதிமுகவிற்கு சிறுபான்மையினர் ஓட்டுக்கள் கிடைப்பதில்லை என்பது உண்மை இல்லை. 
 
அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்தாலும் இரண்டு கட்சிகளும் வெவ்வேறு கோட்பாடுகளும், கொள்கைகளும் கொண்ட கட்சிகள் எனவே தேர்தல் வெற்றி, தோல்விக்கு அவை காரணமாக இருக்காது என்று தெரிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கொரோனா! – மொத்த பாதிப்பு 182 ஆக உயர்வு!