Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காரும் உதயநிதியும்... ஆவிகள் சும்மா விடாது: ஜெயகுமார் சர்ச்சை!

காரும் உதயநிதியும்... ஆவிகள் சும்மா விடாது: ஜெயகுமார் சர்ச்சை!
, திங்கள், 25 ஏப்ரல் 2022 (17:07 IST)
உதயநிதி ஸ்டாலின் அவரது காரை எடுத்து கொண்டு இலங்கைக்கு செல்ல வேண்டும் என ஜெயகுமார் பேட்டி. 

 
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் பல்வேறு திட்டங்கள், திட்டம் குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன. முந்தைய சட்டமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்த போது தவறுதலாக தன் காருக்கு பதிலாக திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினின் காரில் ஏற சென்ற சம்பவம் அச்சமயம் வைரலானது.
 
கமலாலயம் செல்ல வேண்டாம்: 
இதை சுட்டிக்காட்டி சட்டமன்றத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற கூட்டத்தில் நான் பேசும் போது எதிர்கட்சி தலைவர் வெளிநடப்பு செய்யாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய காரை எப்போது வேண்டுமானாலும் எதிர்கட்சி தலைவர் எடுத்து செல்லலாம். எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லுங்கள். ஆனால் எனது காரில் கமலாலயம் மட்டும் சென்று விடாதீர்கள். நான் கூட கடந்த 3 நாட்கள் முன்பாக உங்கள் காரில் ஏற பார்த்தேன் என நகைச்சுவையாக பேசினார். 
 
உதயநிதிக்கு தகுதி வேண்டும்: 
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடியும் கொடுத்திருந்தார். அவர் கூறியதாவது, உதயநிதியின் கார் கமலாலயம் வர வேண்டும் என்றால் அதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும். தலைமுறை தலைமுறையாக குடும்ப அரசியல் செய்பவர்களுக்கு கமலாலயத்தில் இடமில்லை என்று தெரிவித்தார். 
webdunia
இலங்கை பயணம்: 
இதனைத்தொடர்ந்து இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது, எடப்பாடி பழனிசாமி எனது காரை எடுத்துக் கொண்டு செல்லலாம் என கூறும் உதயநிதி ஸ்டாலின் ஆனால், கமலாலயம் செல்ல வேண்டாம் என கூறியது சரியில்லை. உதயநிதி ஸ்டாலின் அவரது காரை எடுத்து கொண்டு இலங்கைக்கு செல்ல வேண்டும். அங்கு 1.5 லட்சம் இலங்கை தமிழர்களின் ஆவி அவரை சும்மா விடாது என தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையை அடுத்து மதுரையிலும் தடம் புரண்ட ரயில்: ரயில் சேவை பாதிப்பு!