Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெரிய மனசும் திறமையும் உங்களிடம் உள்ளது- உதயநிதிக்கு வாழ்த்து கூறிய காயத்ரி ரகுராம்

udhayaniti-stalin- durka stalin
, திங்கள், 27 நவம்பர் 2023 (13:02 IST)
''உங்களை சின்னவர் என்று அழைக்கலாம், ஆனால் தேவைப்படுபவர்களுக்கு உதவும் பெரிய மனசும் திறமையும் உங்களிடம் உள்ளது' என நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அரசியலில் தீவிரமாக ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, 2019 ஆம் ஆண்டு  நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல்களிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்காக
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

பின்னர், 2019 ஆம் ஆண்டு திமுக் இளைஞர் அணி செயலாளராகத் தேர்வு  செய்யப்பட்ட் அனிலைய்ல்,  2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமண்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

 
தற்போது, தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாடு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ளார். அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிம பிரபலங்கள் அரசியல் தலைவராள்  உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் இன்று தன் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினை   நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
 
இதுகுறித்து அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தன் எக்ஸ் தளத்தில்,
 
''எனது பிறந்த நாளை முன்னிட்டு, ஈன்றெடுத்த பெற்றோர் கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்   அவர்களிடமும் - அன்னையார் அவர்களிடமும் இன்று காலை வாழ்த்துகளைப் பெற்றேன். அயராது உழைக்கவும் - அன்பின் வழி நடக்கவும் எந்நாளும் வழிநடத்தும் தாய் - தந்தையரின் வாழ்த்தை பெற்ற மகிழ்வான தருணத்திலிருந்து இந்த நாளை தொடங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.' என்று தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலைய், நடிகை காயத்ரி ரகுராம் தன் எக்ஸ் தளத்தில்,
 
''உங்களை சின்னவர் என்று அழைக்கலாம், ஆனால் தேவைப்படுபவர்களுக்கு உதவும் பெரிய மனசும் திறமையும் உங்களிடம் உள்ளது. பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் எதிர்கால வெற்றிக்காக, வலிமைக்காக நான் பிரார்த்திக்கிறேன். மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர், வழிநடத்தும் வருங்கால தலைவர் என்று கூறி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈஷாவில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட்டம்!